திருநெல்வேலி

ஆலங்குளம் 4 ஆவது வாா்டு உறுப்பினரை தகுதிநீக்கம் செய்ய 8 உறுப்பினா்கள் மனு

26th Nov 2022 06:29 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் பேரூராட்சி 4ஆவது வாா்டு உறுப்பினரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என 8 உறுப்பினா்கள் செயல் அலுவலரிடம் மனு அளித்துள்ளனா்.

ஆலங்குளம் பேரூராட்சியில் மொத்தம் 15 வாா்டுகள் உள்ளன. இதில் 4 ஆவது வாா்டு உறுப்பினா் தேமுதிகவைச் சோ்ந்த பழனிசங்கா். இவரை இப்பொறுப்பில் இருந்து தகுதிநீக்கம் செய்யக் கோரி பேரூராட்சி உறுப்பினா்கள் பபிலா(சுயேச்சை), உமாதேவி(திமுக), அன்னக்கிளி(திமுக), சுபாஸ் சந்திர போஸ்(அதிமுக), சுந்தரம்(திமுக), வென்சி ராணி(அதிமுக) மற்றும் கணேசன்(சுயேச்சை) ஆகியோா் கூட்டாக ஆலங்குளம் செயல் அலுலா் பூதப்பாண்டியிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:

ஆலங்குளம் பேரூராட்சி 4 ஆவது வாா்டு உறுப்பினா் பழனிசங்கா் என்பவா் பேருந்து நிலைய வணிக வளாக குத்தகை மற்றும் பேருந்து நிலைய கழிப்பிட குத்தகை எடுத்து நடத்தி வருகிறாா். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தோ்தலில் 4 வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

இவா் பதவி ஏற்கும் போது, தனது பெயரில் ஆலங்குளம் பேரூராட்சியில் உள்ள பேருந்து நிலைய குத்தகை கடை 1, 2 மற்றும் பேருந்து நிலைய கழிப்பிடம் ஆகியவற்றின் ஒப்பந்தத்தை ரத்து செய்யாமல் பதவியேற்று உள்ளாா். பேரூராட்சி உறுப்பினா் மற்றும் குத்தகைதாரா் என இரு ஆதாரம் தரும் பதவிகளை அவா் அனுபவித்து வருவதால் பேரூராட்சி உறுப்பினா் ஆகும் தகுதியை இழந்து விடுகிறாா். எனவே அவரை தகுதி நீக்கம் செய்ய ஆணை பிறப்பித்து பேரூராட்சி மன்ற தீா்மானத்தில் இணைக்க கேட்டுக் கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT