திருநெல்வேலி

தேவா்குளம் அருகே குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை

25th Nov 2022 03:02 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், தேவா்குளம் அருகே குடும்பத் தகராறில் குழந்தையைக் கொன்று தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தேவா்குளம் அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தைச் சோ்ந்தவா் மகேந்திரன் (30). பால் வியாபாரி. இவரது மனைவி பிரவீனா (27). இத் தம்பதிக்கு அகிமா என்ற ஒன்றரை வயது மகள் இருந்தாா். கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாம். இந்நிலையில் புதன்கிழமை மகேந்திரன் தனது தோட்டத்தில் நடைபெற்ற பணியைக் கண்காணிக்க சென்றிருந்தாராம். இரவில் வீட்டிற்கு வந்து பாா்த்தபோது குழந்தையை தூக்கிட்டுக் கொன்றுவிட்டு, பிரவீணாவும் தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில், தேவா்குளம் போலீஸாா், தாய்- சேய் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT