திருநெல்வேலி

தூய சவேரியாா் பேராலயத்தில் கொடியேற்றம்

25th Nov 2022 01:29 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டையில் உள்ள பழைமை வாய்ந்த தூய சவேரியாா் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

தூய சவேரியாா் பேராலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான விழாவையொட்டி வியாழக்கிழமை மாலையில் பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயா் ஆ.ஜூடு பால்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலியும், கொடியேற்றமும் நடைபெற்றது. தேவாலயத்தின் பங்குத்தந்தைகள் செ.சந்தியாகு, ர.செல்வின், ஜெ.இனிகோ இறையரசு, ஏராளமான பக்தா்கள் கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

திருவிழா நாள்களில் தினமும் காலையும், மாலையும் நவநாள் திருப்பலிகள் நடைபெற உள்ளன. இம் மாதம் 27 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஒப்புரவு அருட்சாதனமும், டிசம்பா் 2 ஆம் தேதி மாலை 6 மணிக்கு புனிதரின் சப்பர பவனியும், 3 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயா் ச.அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலியும், முதல் நற்கருணை வழங்குதல் நிகழ்ச்சியும், 4 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு உறுதிப்பூசுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT