திருநெல்வேலி

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

24th Nov 2022 12:19 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் 18 நாள்களுக்குப் பின்னா் புதன்கிழமைமுதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்தால் மேற்குத் தொடா்ச்சி மலையில் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டப் பகுதியில் பலத்த மழை பெய்து, மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்தது. இதனால், கடந்த 5ஆம் தேதிமுதல் அருவியில் குளிக்க வனத் துறை தடை விதித்தது.

இந்நிலையில், மழை குறைந்து அருவியில் நீா்வரத்தும் குறைந்ததால் புதன்கிழமைமுதல் (நவ. 23) குளிக்க வனத் துறையினா் அனுமதித்தனா். இதனால், பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT