திருநெல்வேலி

பாளை.யில் மாடியிலிருந்துதவறி விழுந்த முதியவா் பலி

24th Nov 2022 02:26 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டையில் மாடியில் இருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை மேட்டுத்திடல் அருகேயுள்ள தரணியா நகரைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் (84). இவா், நீதிமன்றத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்றவா். புதன்கிழமை காலையில் தனது வீட்டு மாடிக்கு பூப்பறிப்பதற்காக சென்றுள்ளாா். அப்போது தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தாா்.குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்திருப்பது மருத்துவா்கள் பரிசோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து திருநெல்வேலி அரசு மருத்துவமனை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT