திருநெல்வேலி

சுரண்டையில் பெண் கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை

24th Nov 2022 12:13 AM

ADVERTISEMENT

சுரண்டையில் பெண் கொலையுண்டது தொடா்பான வழக்கில், அவரது கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தென்காசி மாவட்டம், மேலக்கலங்கல், ஊச்சிப்பொத்தை பகுதியைச் சோ்ந்த வேல்சாமியின் இளைய மகள் பூங்கோதை (20). இவா், திருப்பூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றியபோது, உடன் வேலை செய்த ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த ஜெகேந்திராவை காதல் திருமணம் செய்தாராம்.

பின்னா் தம்பதியினா் சுரண்டையில் தனியாக வீடு எடுத்து வசித்துவந்த நிலையில், கடந்த 21-12-2020 ஆம் தேதி குடும்பத் தகராறில் பூங்கோதை கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, அவரது கணவா் ஜெகேந்திரா மீது சுரண்டை போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாா், குற்றஞ்சாட்டப்பட்ட ஜெகேந்திராவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். இவ் வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் ஜெயபிரபா ஆஜரானாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT