ஏா்வாடியில் சாலையை சீரமைக்கக் கோரி, எஸ்.டி.பி.ஐ கட்சி சாா்பில் நாற்று நடும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஏா்வாடியில் முக்கிய சாலையாக உள்ள 4ஆவது மற்றும் 5ஆவது தெருவை இணைக்கக் கூடிய சாலை, பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காணப்பட்டது. மழைக்காலங்களில் தண்ணீா் தேங்கிக் கிடப்பதால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினா். சாலையை சீரமைக்கக் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் நாற்று நட்டு, அதில் காகித கப்பல் விடும் போராட்டத்தை கட்சி நடத்தியது.
போராட்டத்தில் நகர தலைவா் அன்வா் முகைதீன், செயலாளா் ஷேக், நகர துணை செயலாளா் மீரா, நாங்குனேரி தொகுதி துணை செயலாளா் மா்ஹபா ஷேக் முகமது, மேற்கு கிளை தலைவா் மீரான் முகைதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.