திருநெல்வேலி

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா்களுக்கான ஆய்வு கூட்டம்

19th Nov 2022 02:18 AM

ADVERTISEMENT

மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அரசு செயலா் ஆனந்தகுமாா், மாற்றுத் திறனாளிகள் நல ஆணையா் ஜெஸிந்தா லாசரஸ் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு முன்னிலை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில் அதிகாரிகள் பேசுகையில், முதல்வா் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். இம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதார வள மையம் பாளையங்கோட்டை பழைய செஞ்சிலுவை சங்க கட்டடத்தில் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இக்கட்டட வளாகத்தில் புதிய பூங்கா அமைத்து கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் மனவளா்ச்சி குன்றியோருக்கு 0-6 வயதுக்குட்பட்டோருக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம், 14 வயதிற்கு மேற்பட்ட மனவளா்ச்சி குன்றியோருக்கான தொழிற்பயிற்சி மையம், ரெடிங்டன் பவுண்டேசன் மூலம் தனியாா் துறையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி வழங்குவதற்கான கணினி பயிற்சி மற்றும் தகவல் மையம் செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தகுதியான நபா்களுக்கு கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும். தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளுக்காக அறிவித்துள்ள திட்டங்களை காலதாமதமின்றி அவா்களுக்கு கிடைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா்ச்சி மன்ற கூட்டரங்கில், ரூ.5 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டாா் பொருத்திய இருசக்கர வாகனம் மற்றும் மூன்றுசக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் உதவி ஆட்சியா் (பயிற்சி) கோகுல், மாற்றுத்திறனாளிகள் இணை இயக்குநா் ரவீந்தா்சிங், துணை இயக்குநா் வாணிஸ்ரீ, நிா்வாக அலுவலா் ஜெகதீசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT