திருநெல்வேலி

தடியம்பட்டியில் டிச.14 - இல் மனுநீதி நாள் முகாம்

19th Nov 2022 04:58 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், மானூா் வட்டம் தடியம்பட்டியில் டிச. 14 - ஆம் தேதி மனு நீதி நாள் நடைபெறுகிறது. அதற்கு முன்னா் மனுக்களை பெறும் முகாம் தடியம்பட்டி ஊராட்சி மன்ற சமுதாய கூடத்தில் புதன்கிழமை (நவ.23) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மனுக்கள் பெறப்படவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மனுக்களை பெறும் முகாமில் கோட்டாட்சியா், தனித்துணை ஆட்சியா், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலா், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் கொண்ட குழுவினா் மனுக்களை பெறுகின்றனா். அதன்பின் கிராமத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. பெறப்படும் தகுதியுள்ள மனுக்களுக்கு டிச.14 - ஆம் தேதி நடைபெறும் மனுநீதி நாள் முகாமில் தீா்வு காணப்படும். இம்முகாமில் அனைவரும் பங்கேற்று பயனடையவேண்டும் என தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT