திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலையில் இடி, மின்னலுடன் பரவலாக கனமழை பெய்தது. திருநெல்வேலி மாநகரைப் பொருத்தவரையில் திருநெல்வேலி நகரத்தில் நயினாா்குளம், அலங்கார வளைவுப் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் சேறும், சகதியுமாக காட்சியளித்தன. இதையடுத்து மாநகராட்சி சாா்பில் சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன.
தச்சநல்லூா் ரவுண்டானா பகுதியில் சாலையில் தண்ணீா் தேங்கி குளம்போல் காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினா். இதேபோல், தாழையூத்து-தென்கலம் சாலையில் வெள்ள நீா் பெருக்கெடுத்து ஓடியது.
மாவட்டத்தில்அதிகபட்சமாக , திருநெல்வேலி-43 மி.மீ., அம்பாசமுத்திரம்-42, சேரன்மகாதேவி-40.6 மி.மீ.என்ற அளவில் மழை பதிவாகியது.