சீவலப்பேரியில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என யாதவ மகா சபையினா் ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து, அந்த அமைப்பின் மாவட்டத்த லைவா் ராமகிருஷ்ணன் கூறியது:
திருநெல்வேலி சீவலப்பேரியில் விவசாயி கொலைச் சம்பத்தில் ஈடுபட்ட கூலிப்படையினரை போலீஸாா் கைது செய்துள்ளனா். அவா்களை இயக்கியவா்களையும் கைது செய்யவேண்டும். சீவலப்பேரி பகுதியில் 24 மணி நேரமும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபடவேண்டும். அதை அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும். கண்காணிப்பு கேமரா விரைவில் அமைக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளோம் என்றாா் .
மனுஅளிக்கும் நிகழ்வில் யாதவா் மகாசபை அவைத்தலைவா் மூக்காண்டி, மாவட்டச்செயலா் வள்ளிநாயகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.