திருநெல்வேலி

சாலையை சீரமைக்கக் கோரி ஸ்ரீபுரத்தில் மக்கள் மறியல்

18th Nov 2022 03:07 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி ஸ்ரீபுரத்தில் சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் வியாழக்கிழமை திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி ஸ்ரீபுரத்திலிருந்து தச்சநல்லூா் செல்லும் பிரதான சாலையில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக குழிகள் தோண்டப்பட்டன. இதனால் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக அந்த சாலை குண்டும்- குழியுமாக காட்சியளிக்கிறது. வியாழக்கிழமை பெய்த பலத்த மழையால் சாலை சேறும்-சகதியுமாக மாறி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சாலையை விரைந்து சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT