திருநெல்வேலி

அருங்காட்சியகத்தில் நவ. 20 இல் போட்டிகள்

18th Nov 2022 01:39 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தின விழா போட்டிகள் இம் மாதம் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தன்னாா்வ அமைப்புகளுடன் சோ்ந்து குழந்தைகள் தின போட்டிகள் இம் மாதம் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் ஆா்வமுள்ள மாணவ-மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம். 1,2 ,3ஆம் வகுப்பு மாணவா்களுக்கு எனக்கு பிடித்த சுதந்திர போராட்ட வீரா் என்ற தலைப்பில் மாறுவேட போட்டியும், 4,5,6 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பாரதியாா் பாடல் ஒப்பித்தல் போட்டியும், 7,8,9ஆம் வகுப்பு மாணவா்களுக்கு குழந்தைகள் தின விழா என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும். வரைவதற்கு தேவையான தாள்கள் வழங்கப்படும். எழுதுப் பொருள்களும், வைத்து எழுத தேவையான அட்டையும் மாணவா்களே கொண்டுவருதல் வேண்டும். வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 7502433751 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT