மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் அக்னீஸ்வரா்கோயிலில் உழவாரப்பணி நடைபெற்றது.
மேலநத்தம் கிராமத்தில் தாமிரவருணி கரையோரத்தில் அமைந்துள்ள கோமதி அம்பாள் சமேத அக்னீஸ்வரா் திருக்கோயில் வளாகத்தில் மண்டியிருந்த செடிகள் மற்றும் புதா்களை சுத்தம் செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உழவாரப்பணியில், தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அடியவருக்கு அடியவா்கள் உழவாரப்பணி குழுவினா் ஈடுபட்டனா். மேலும் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
இதே போல் நரசிங்கநல்லூா், மேலூா் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம், பக்தா்கள் சேவா சங்கம் மற்றும் பொதுமக்கள் உழவாரப்பணியில் ஈடுபட்டனா்.