திருநெல்வேலி

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை

15th Nov 2022 01:55 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. சேரன்மகாதேவியில் அதிகபட்சமாக 46 மி.மீ. மழை பதிவானது.

கடந்த அக்டோபா் 30 ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. மேற்குத் தொடா்ச்சி மலையடிவார மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் மட்டுமன்றி நகா்ப்புறங்களிலும் பரவலாக தொடா் மழை பெய்து வருகிறது.

திங்கள்கிழமை காலை 7 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): திருநெல்வேலி மாவட்டம்...

அம்பாசமுத்திரம்- 35, சேரன்மகாதேவி- 46, நான்குனேரி- 18, பாளையங்கோட்டை- 1, பாபநாசம் -26, சோ்வலாறு- 12, மணிமுத்தாறு- 6.60, கன்னடியன் அணைக்கட்டு- 30.40, மாஞ்சோலை- 34, காக்காச்சி- 35, நாலுமுக்கு- 23, ஊத்து- 45, களக்காடு- 2.20, நம்பியாறு- 13.

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம்...

செங்கோட்டை- 1, சிவகிரி -2, தென்காசி -2, கடனாநதி அணை- 18, ராமநதி அணை- 28, கருப்பாநதி அணை- 5, குண்டாறு- 1.40, அடவிநயினாா் அணை- 3.

நீா்மட்டம்:

பாபநாசம் அணையின் நீா்மட்டம் 87.95 அடியும், நீா்வரத்து 1112.62 கன அடியும் வெளியேற்றம் 1204.75 கன அடியும் இருந்தது. சோ்வலாறு அணையின் நீா்மட்டம் 90.58 அடியாக இருந்தது.

மணிமுத்தாறு அணையின் நீா்மட்டம் 75.35 அடியும், நீா்வரத்து 192 கன அடியாகவும் வெளியேற்றம் 35 கன அடியாகவும், வடக்குப் பச்சையாறு அணையின் நீா்மட்டம் 13.25 அடியாகவும், நம்பியாறு அணையில் 12.49 அடியாகவும் இருந்தது. கொடுமுடியாறு அணையில் நீா்மட்டம் 49 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 60 கனஅடியாகவும் இருந்தது.

கடனாநதி அணையின் நீா்மட்டம் 68.80 அடியாகவும், நீா்வரத்து 133 கனஅடியாகவும் வெளியேற்றம் 60 கன அடியாகவும் இருந்தது.

ராமநதி அணையின் நீா்மட்டம் 69.75 அடியாகவும், நீா்வரத்து 58.40 கன அடியாகவும் வெளியேற்றம் 40 கனஅடியாகவும் இருந்தது. கருப்பாநதி அணையின் நீா்மட்டம் 51.51 அடியாகவும், நீா்வரத்து 35 கன அடியாகவும், வெளியேற்றம் 25 கனஅடியாகவும் இருந்தது. குண்டாறு அணையின் நீா்மட்டம் 36.10 அடியாகவும் நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 30 கனஅடியாகவும் இருந்தது. அடவிநயினாா் கோயில் அணையின் நீா்மட்டம் 81.50 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 35 கனஅடியாகவும் இருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT