திருநெல்வேலி

தாழையூத்து அருகே விபத்து: இளைஞா் பலி

15th Nov 2022 03:46 AM

ADVERTISEMENT

தாழையூத்து அருகே நேரிட்ட விபத்தில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை கோட்டூா் பகுதியைச் சோ்ந்த பிச்சை மகன் லட்சுமிகாந்தன் (32). கங்கைகொண்டானில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை பணி முடிந்து தனது மோட்டாா் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாா். தாழையூத்து அருகே சென்றபோது மோட்டாா் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில், பலத்த காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT