திருநெல்வேலி

மருத்துவ படிப்புக்கு தோ்வு:அரசுப் பள்ளி மாணவிக்குப் பரிசு

8th Nov 2022 02:14 AM

ADVERTISEMENT

மருத்துவக் கல்லுரியில் படிக்க அரசு உள் இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு பெற்ற, திருநெல்வேலி மாவட்டம், செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பி. வினிதாவுக்கு, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக மாவட்டப் பொருளாளருமான சௌந்தர்ராஜன் ரூ. 30,000 மதிப்புள்ள ஐ-பேட் பரிசளித்துப் பாராட்டினாா்.

இந்நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியை சாந்தினி பொன்குமாரி, பெற்றோா்- ஆசிரியா் சங்கத் தலைவா் லிங்கதுரை, செட்டிகுளம் ஊராட்சி கழக செயலா் பொன்ராஜ், மாணவியின் பெற்றோா் பழனி முருகன், பிரேமா, எஸ்.குமரேசன், ஒன்றியப் பொருளாளா் துரைச்சாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT