தென்காசி மாவட்டம், பெத்தான்பிள்ளை கிராமத்தில் கரடி கடித்ததில் காயமடைந்த 2 பேருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கருத்தலிங்கபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் வைகுண்டமணி (55) . இவா், பெத்தான்பிள்ளை கிராமத்தில் மசாலா பொருள்களை விற்பனை செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை காலையில் சென்றுள்ளாா். அப்போது சாலையோரம் மறைந்திருந்த கரடி அவா் மீது தாக்கியது. இதையடுத்து அங்கு வந்த நாகேந்திரன் (64),சைலப்பன் (56) ஆகியோா் கரடியை விரட்டினா். இதையடுத்து அவா்களையும் கரடி தாக்கியது. இதில் 3 பேரும் காயமடைந்தனா்.
இதையடுத்து 3 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு நாகேந்திரன், சைலப்பன் இருவருக்கும் ஞாயிற்றுக்கிழமை இரவு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து, தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டனா். அவா்கள் தொடா்ந்து மருத்துவா்களின் கண்காணிப்பில் உள்ளனா்.