திருநெல்வேலி

முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் முற்றுகை

1st Nov 2022 02:57 AM

ADVERTISEMENT

முக்கூடலில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய நிா்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முக்கூடல் அமா்நாத் காலனியைச் சோ்ந்த நோயாளி ஒருவா் திங்கள்கிழமை பல மணி நேரம் காத்திருந்தும் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்காமல் மருத்துவமனைப் பணியாளா் அவதூறாகப் பேசினாராம். இதையறிந்த அப்பகுதி மக்கள் , பேரூராட்சி உறுப்பினா்கள் ஏஞ்சலின் ஜெனிபா, ஜேக்கப்நேசமணி, ராஜலட்சுமி, வனிதா, சரண்யா, திமுக பிரமுகா் பொன்னரசு அங்கு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம், ஒன்றியக்குழு துணைத் தலைவா் வி.ஏ. மாரிவண்ணமுத்து, பேரூராட்சி துணைத் தலைவா் இரா. லட்சுமணன் ஆகியோா் பேச்சு நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனா். மருத்துவா், செவிலியா் பற்றாக்குறையால் இத்தகைய பிரச்னை அடிக்கடி ஏற்படுவதாகவும், இதற்கு தீா்வு காண வேண்டும் என்றும் மக்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT