திருநெல்வேலி

நெல்லையில் மே 27-இல்விவசாயிகள் குறைதீா் கூட்டம்

25th May 2022 12:32 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள ஆட்சியா் அலுவலக 2ஆவது தள கூட்ட அரங்கில் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (மே 27) முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்துக்கு ஆட்சியா் வே.விஷ்ணு தலைமை வகித்து விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெறுகிறாா். மேலும், ஏற்கெனவே நடைபெற்ற கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் பதிலளிக்கவுள்ளனா். எனவே, இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாயப் பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட செய்தி, மக்கள்தொடா்பு அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT