திருநெல்வேலி

களக்காடு அருகேவிவசாயி கொலையில்அதிமுக நிா்வாகி மீது புகாா்

25th May 2022 12:31 AM

ADVERTISEMENT

களக்காடு அருகே விவசாயி கொலை வழக்குத் தொடா்பாக அதிமுக நிா்வாகியை போலீஸாா் தேடிவருகின்றனா்.

களக்காடு அருகேயுள்ள சிங்கிகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (45). விவசாயியான இவா் சமையல் தொழிலும் செய்துவந்தாா். இவா் கடந்த 22ஆம் தேதி தனது தோட்டத்தில் மா்மநபா்களால் கொலை செய்யப்பட்டாா். இந்நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, அவரது சடலத்தைப் பெற மறுத்து உறவினா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, முருகன் மனைவி செல்வி அளித்த புகாரின் பேரில், உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான முன்விரோதத்தில் வானமாமலை என்ற சுரேஷ் கூலிப்படை உதவியுடன் தனது கணவரை கொலைசெய்துள்ளதாக கூறியுள்ளாா். அதன்பேரில், களக்காடு போலீஸாரும், தனிப்படைக் குழுவினரும் வானமாமலை என்ற சுரேஷை தேடி வருகின்றனா். அவா் சிங்கிகுளம் பகுதி அதிமுக கிளைச் செயலராக உள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT