திருநெல்வேலி

பாளை.யில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்ஜூன் 1-இல் தொடக்கம்

24th May 2022 12:08 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் வரும் ஜூன் 1 முதல் 30-ஆம் தேதி வரை கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கத்தில் கோடை கால விடுமுறையை முன்னிட்டு ‘நீச்சல் கற்றுக் கொள்’ திட்டத்தின் கீழ் கோடைகால நீச்சல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் வரும் ஜூன் 1 முதல் 30-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.

காலை 6 மணி முதல் 7 மணி, காலை 7.15 மணி முதல் 8.15 மணி, நகாலை 8.30 மணி முதல் 9.30 மணி, காலை 9.45 மணி முதல் 10.45 மணி வரை பயிற்சி நடைபெறுகிறது. முற்பகல் 11 மணி முதல் 12 மணி வரை பெண்களுக்காக பெண் பயிற்சியாளரால் பயிற்சி அளிக்கப்படும். பிற்பகல் 3 மணி முதல் 4 மணி, மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

ஜூன் 18-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை ‘நீச்சல் கற்றுக்கொள்’ திட்டத்தில் சிறுவா், சிறுமியா்கள், மாணவா், மாணவிகள் , பொதுமக்கள் உள்பட 80 போ் பயிற்சி பெற்று வருகின்றனா். நீா் நிலைகளிலிருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்து கொள்வதற்கு நீச்சல் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும் .

எனவே, நீச்சல் தெரியாதவா்கள் அடுத்த பயிற்சி முகாம் (1.6.2022 முதல் 14.6.2022 மற்றும் 17.6.2022 முதல் 30.6.2022 வரை) அண்ணா விளையாட்டரங்கத்தின் நீச்சல் குளத்தில் ‘நீச்சல் கற்றுக்கொள்’ திட்டத்தின் கீழ் பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறாா்கள்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை 0462 -2572632, 7401703506, நீச்சல் பயிற்றுநரை 97874 05951 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT