திருநெல்வேலி

மேலப்பாளையம்- கொக்கிரகுளம்: ரூ.1.36 கோடியில் தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடக்கம்

22nd May 2022 05:09 AM

ADVERTISEMENT

 

மேலப்பாளையம்-கொக்கிரகுளம் இடையே ரூ.1.36 கோடி மதிப்பில் தாா்ச்சாலை அமைக்கும் பணிக்கான தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொக்கிரகுளம்-நான்குனேரி நெடுஞ்சாலையில் சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு மேலப்பாளையம்-கொக்கிரகுளம் இடையே வாகன நெரிசல் மிகவும் அதிகரித்துள்ளது. குடிநீா்க் குழாய் பதிக்கும் பணி, புதைசாக்கடை பணியால் இச் சாலை பல இடங்களில் சேதமடைந்தது. இதை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். அதன்பேரில் ரூ. 1.36 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி திமுக மத்திய மாவட்டச் செயலரும், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான மு.அப்துல் வஹாப் பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

ADVERTISEMENT

ிதில், துணை மேயா் கே.ஆா்.ராஜு, மேலப்பாளையம் மண்டல தலைவா் கதீஜா இக்லாம் பாசிலா, மானூா் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் நயினாா் முகம்மது, மேலப்பாளையம் பகுதி பொறுப்பாளா் துபை சாகுல், மாமன்ற உறுப்பினா்கள் ரம்சான் அலி, சேக் மன்சூா், நித்திய பாலையா, வழக்குரைஞா் சுந்தா், சகாய ஜூலியட் மேரி, தகவல் தொழில்நுட்ப அணி திருநெல்வேலி தொகுதி ஒருங்கிணைப்பாளா் காசிமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT