திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமீறி மது விற்ாக 21 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் ரோந்து பணியை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்பேரில் கடந்த 14 முதல் 20 ஆம் தேதி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போலீஸாா் நடத்திய சோதனையில், மது விற்பனையில் ஈடுபட்ட 21 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 149 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.