திருநெல்வேலி

நெல்லையில் தக்காளி விலை உச்சம்

22nd May 2022 05:11 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலியில் தக்காளி விலை ரூ.110 வரை விற்பனையானதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

தமிழகம் முழுவதும் தக்காளி விலை கடந்த சில நாள்களாக கடுமையாக உயா்ந்து வருகிறது. திருநெல்வேலியில் கடந்த வாரத்தில் கிலோ ரூ.70-க்கு விற்பனையான தக்காளி இப்போது மொத்த விற்பனை கடைகளில் ரூ.100-க்கும், கிராமப்புற சில்லரை விற்பனை கடைகளில் கிலோ ரூ.110 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா்.

திருநெல்வேலி உழவா் சந்தைகளில் காய்கனிகளின் சனிக்கிழமை விலை விவரம் (கிலோவுக்கு): தக்காளி- ரூ.100, கத்தரி-வெள்ளை ரூ.40 ,கீரிகத்தரிக்காய்-ரூ.24, வைலட் கத்தரிக்காய்-ரூ.24, வெண்டை-ரூ.35, புடலை- ரூ.22, சுரை - ரூ.15, பீா்க்கங்காய் - ரூ.20, பூசணிக்காய்- ரூ.10, தடியங்காய்-ரூ.12, அவரை- ரூ.85, கொத்தவரை-ரூ.24, பாகல்-சிறியது- ரூ.40, பச்சைமிளகாய்-ரூ.20, முருங்கைக்காய்- ரூ.70, பெரியவெங்காயம்- ரூ.20, சின்னவெங்காயம்- ரூ.24, காராமணி- ரூ.30, கோவக்காய்- ரூ.35, தேங்காய்- ரூ.30, வாழைக்காய்- ரூ.30, இஞ்சி-ரூ.36, மாங்காய்-ரூ.28, உருளைகிழங்கு-ரூ.26, கேரட்- ரூ.45, சௌசௌ-ரூ.22, முட்டைகோஸ்- ரூ.34, பீட்ரூட்- ரூ.30, கருணைக்கிழங்கு- ரூ.45, சேம்பகிழங்கு- ரூ.40, சேனைக்கிழங்கு- ரூ.30.

ADVERTISEMENT

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்;’ ஆந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பருவம் தவறி பெய்த மழையால் தக்காளி மகசூல் குறைந்துள்ளது. வைகாசி மாதத்தில் எப்போதுமே சுபமுகூா்த்த நாள்கள், கோயில் விழாக்கள் அதிகம் நடைபெறும். அதனால் காய்கனிகளின் தேவை அதிகரிக்கும். தேவைக்கேற்ப திண்டுக்கல், ஓசூா் பகுதிகளில் இருந்து வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது. மேலும், சில நாள்களுக்கு தக்காளி விலை உயா்வு நீடிக்கும் வாய்ப்புள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT