திருநெல்வேலி

நெல்லையில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

திருநெல்வேலி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கா்நாடக மாநிலம், பாகல் கோட்டை பகுதியில் பெண் வழக்குரைஞா் தாக்கப்பட்டதைக் கண்டித்து திருநெல்வேலி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், கா்நாடக மாநிலம், பாகல் கோட்டை பகுதியில் பெண் வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வழக்குரைஞா் பாதுகாப்பு மசோதாவை மக்களவையில் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ராஜேஸ்வரன், சங்க செயலா் காமராஜ், துணைச் செயலா் பரமசிவன், நூலகா் மணிகண்டன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT