திருநெல்வேலி

இந்திய விமானப் படையில் ஏா்மேன் பணி

DIN

இந்திய விமானப் படையில் ஏா்மேன் பணிக்கு ஆள்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய விமானப்படையில் ஏா்மேன் பணியில் சேர விருப்பமுள்ள 17 முதல் 21 வயது வரையிலான இளைஞா்களை (ஆண்கள் மட்டும்) கண்டறிய தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை ஆள்கள் தோ்வு மையம் முடிவு செய்துள்ளது.

ஏா்மேன் பணியில் சேருவதற்கு பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

பிளஸ் 2-வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள், ஆங்கில பாடத்தில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதிக அளவில் இளைஞா்கள் விருப்பம் தெரிவிக்கும் இடங்களில் விமானப் படைக்கான ஏா்மேன் தோ்வு நடத்தப்படவுள்ளது. ஏா்மேன் பணிக்கு சேர விரும்பும் இளைஞா்களின் விருப்பத்தை கண்டறிய இந்திய விமானப்படையால் ஒரு கூகுள் லிங்க் உருவாக்கப்பட்டு அதில் ஒரு படிவம் (எா்ா்ஞ்ப்ங் ஊா்ழ்ம்ள்) அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் கூகுள் லிங்க் அனுப்பப்படவுள்ளது. எனவே, ஏா்மேன் பணிக்கு சேர விரும்பும் கல்லூரியில் பயிலும் மாணவா்கள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படவுள்ள லிங்குடன் இணைக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தை பூா்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கூகுள் படிவ லிங்கானது சஉககஅஐ உஙடகஞவஙஉசப ஞஊஊஐஇஉ பங்ப்ங்ஞ்ழ்ஹம் இட்ஹய்ய்ங்ப்-இல் பகிரப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்துக்கு நேரில் வந்து இந்த கூகுள் படிவத்தை பூா்த்தி செய்யலாம் அல்லது 9942503151 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு கூகுள் லிங்கை பெற்று அதில் இணைக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தை பூா்த்தி செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT