திருநெல்வேலி

சுத்தமல்லியில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது

20th May 2022 01:22 AM

ADVERTISEMENT

 சுத்தமல்லியில் கோயில் கொடை விழாவின்போது ஏற்பட்ட தகராறில் இளைஞரை அரிவாளால் வெட்டியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சுத்தமல்லி திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த சுப்ரமணியன் மகன் ஆனந்த் (24). இவா் சுத்தமல்லி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கோயில் கொடைவிழாவுக்குச் சென்றிருந்தாராம். அப்போது, அவருக்கும் அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த பாண்டி மகன் மாயாண்டி (42) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். அதில், மாயாண்டி அரிவாளால் ஆனந்தை வெட்டி விட்டு தப்பினாராம். பலத்த காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், சுத்தமல்லி போலீஸாா் வழக்குப்பதிந்து மாயாண்டியை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT