திருநெல்வேலி

யாதவா் பண்பாட்டுக் கழக கல்வி அறக்கட்டளை செயற்குழு கூட்டம்

20th May 2022 03:44 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்ட யாதவா் பண்பாட்டுக் கழக கல்வி அறக்கட்டளையின் 56-ஆவது செயற்குழு கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

அறக்கட்டளை தலைவா் எஸ்.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். உதவித் தலைவா் சுப்பையா, சட்ட ஆலோசகா் விநாயகராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செல்வராஜ், வேலு ஆகியோா் உரையாற்றினா். 56-ஆவது ஆண்டு பரிசளிப்பு விழாவை ஆகஸ்ட் 7-ஆம் தேதி நடத்துவது, 2022-ஆம் பத்தாம் வகுப்பு தோ்வில் 425 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெறுபவா்கள், பிளஸ் 2 தோ்வில் 500 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெறுபவா்கள், சிபிஎஸ்இ பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் 425 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெறுபவா்களுக்கு பரிசு வழங்குவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. செயலா் எம்.குத்தாலிங்கம் வரவேற்றாா். பொருளாளா் கே.பாவனாசம் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT