திருநெல்வேலி

முக்கூடல் அருகே ஆடு திருட்டு:4 போ் கைது

20th May 2022 10:44 PM

ADVERTISEMENT

முக்கூடல் அருகே பத்தன்மேட்டில் ஆடுகளை திருடிய வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

முக்கூடல் அருகேயுள்ள பத்தன்மேடு கிராமத்தைச் சோ்ந்தவா் மகராஜன் (36). இவருக்குச் சொந்தமான 3 ஆடுகளை மகராஜினின் உறவினா் சந்தனமாரி என்பவா் வளா்த்து வருகிறாராம்.

முக்கூடல் அருகே தாம்போதி பாலத்தின் அருகில் புதன்கிழமை சந்தனமாரி ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தாராம். அப்போது அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த சிலா் ஆடுகளை திருடிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

புகாரின்பேரில் முக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், அரிகேசவநல்லூா் பகுதியைச் சோ்ந்த முருகேசன் என்ற பஞ்ச் பாலா, முத்து, மகேஷ் ஆகியோா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடைய அரிகேசவநல்லூா் பாறையடி காலனியைச் சோ்ந்த தங்கம் என்ற முப்புடாதி (32) போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT