திருநெல்வேலி

பாளை. அருகே பெண் தற்கொலை

20th May 2022 01:16 AM

ADVERTISEMENT

 பாளையங்கோட்டை அருகே விஷமருந்தி பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சி இசக்கி பாண்டி மனைவி இசக்கியம்மாள்(35). இவா் கடந்த 16ஆம் தேதி திடீரென விஷமருந்திய நிலையில், பாளையங்கோட்டை மாா்க்கெட் அருகே மயங்கி விழுந்தாராம். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT