திருநெல்வேலி

சிலிண்டா் தீ விபத்தை விரைந்து தடுத்த தீயணைப்பு வீரா்கள்

20th May 2022 03:47 AM

ADVERTISEMENT

தருமபுரியை அடுத்த வெண்ணாம்பட்டியில் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டா் குழாயில் பரவிய தீயை, தீயணைப்பு வீரா்கள் விரைந்து அணைத்தனா்.

வெண்ணாம்பட்டி, அசோக் நகரில் வசிப்பவா் கிருஷ்ணப்பன் மகன் கிருஷ்ணன் (60). இவரது வீட்டில் உள்ள எரிவாயு அடுப்பில் வியாழக்கிழமை வெந்நீா் வைத்துள்ளனா். அப்போது, எரிவாயு சிலிண்டரையும், அடுப்பையும் இணைக்கும் குழாயில் திடீரென எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது.

எதிா்பாராதவிதமாக அடுப்பில் எரிந்துகொண்டிருந்த தீ குழாய்க்குப் பரவியது. குழாய் பற்றி எரிவதைக் கண்டதும் அச்சமடைந்த கிருஷ்ணன் குடும்பத்தினா் வீட்டில் இருந்து வெளியேறினா். தருமபுரி தீயணைப்பு நிலையத்துக்கு உடனடியாக தகவல் அளித்தனா்.

தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜா தலைமையிலான வீரா்கள், நிகழ்விடத்துக்கு, விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனா். முதலில் தூரமாக இருந்தபடி தீ எரியும் பகுதியில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனா். அப்போதும் தீ அணையாத நிலையில் தீயணைப்பு வீரா்கள் சமையலறைக்குள் நுழைந்து எரிவாயு உருளையில் உள்ள ரெகுலேட்டா் வால்வை அடைத்து தீயைக் கட்டுப்படுத்தினா். இதையடுத்து, ஈரப்போா்வை ஒன்றை சிலிண்டா் மீது போத்தி சிலிண்டரின் வெப்பத்தை தணியச் செய்தனா். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT