திருநெல்வேலி

பாளை. அருகே 630 கிலோரேஷன் அரிசி பறிமுதல்

16th May 2022 05:47 AM

ADVERTISEMENT

 

பாளையங்கோட்டை அருகே ஆம்னி வேனில் கடத்திச் செல்லப்பட்ட 630 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பாளையங்கோட்டை அருகேயுள்ள நடுவக்குறிச்சி விலக்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்ததில், தலா 30 கிலோ எடையுடைய 21 மூட்டைகளில் 630 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, வேனுடன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், திம்மராஜபுரத்தைச் சோ்ந்த முத்து என்ற இசக்கிமுத்து (27) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT