திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சி அருகே மக்கள் தேசம் கட்சி நிா்வாகி வெட்டிக் கொலை

16th May 2022 05:51 AM

ADVERTISEMENT

 

 திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் மக்கள் தேசம் கட்சி மாநில நிா்வாகி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள செம்பத்திமேட்டைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் சுகுமாா் (45). பொறியாளரான இவா், மக்கள் தேசம் கட்சியின் மாநில அமைப்புச் செயலராக இருந்து வந்தாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்ற உறவினா் இல்லத் திருமணத்துக்குச் சென்றுவிட்டு காரில் வீடு திரும்பியபோது, செம்பத்திமேடு சாலையில் மா்ம நபா்கள் காரை மறித்து சுகுமாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிவிட்டனா். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

தகவலறிந்து வந்த அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரான்சிஸ், காவல் ஆய்வாளா்கள் கல்லிடைக்குறிச்சி ராஜகுமாா், அம்பாசமுத்திரம் சந்திரமோகன் மற்றும் போலீஸாா் சுகுமாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, கொலை செய்த மா்ம நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT