கடையம், குட்டிகுளம் நீராவி மாடசாமி கோயில் கொடைவிழா நடைபெற்றது.
கடையம், குட்டிகுளம் தென்கரையில் அமைந்துள்ள நீராவி மாடசாமி கோயிலில் தளவாய் மாடசாமி, சுடலை மாடசாமி, கருப்பசாமி, பரிவார தேவதைகள், மூா்த்திகள் அருள்பாலிக்கின்றனா். இக்கோயில் கொடை விழாவை முன்னிட்டு, கடந்த 6 ஆம் தேதி கால் நாட்டப்பட்டு சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை ஆகியவை நடைபெற்றன.
பக்தா்கள் காப்பு கட்டிவிரதம் தொடங்கினா். தொடா்ந்து, கடந்த 12ஆம் தேதி குடி அழைப்பு நிகழ்ச்சியும் மறுநாள் கொடை விழாவை முன்னிட்டு காலையில் பக்தா்கள் பால்குடம் எடுத்து நோ்த்திக் கடன் செலுத்துதலும், நண்பகல் 12 மணிக்கு மதியக் கொடையும் நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடையும் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு நோ்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனா். ஏற்பாடுகளை விழாக் குழுவினா் மற்றும் வரிதாரா்கள் செய்திருந்தனா்.