திருநெல்வேலி

மேலநத்தம் சுடலைமாடசுவாமி கோயில் கொடை விழா

12th May 2022 03:11 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: மேலநத்தம் ஆற்றங்கரை மண்டகப்படி சுடலைமாடசாமி கோயில் கொடை விழா இருநாள்கள் நடைபெற்றது.

மேலப்பாளையத்தை அடுத்த மேலநத்தம் கிராமத்தில் உள்ள ஆற்றங்கரை மண்டகப்படி சுடலை மாடசாமி கோயில் கொடை விழாவையொட்டி கடந்த திங்கள்கிழமை குடிஅழைப்பு, மாக்காப்பு தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை சிவனணைந்த பெருமாளுக்கு தீபாராதனை, சிறப்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பாயச திரளையுடன் மதியக் கொடை, இருளப்ப சுவாமிக்கு பூஜை, சிறப்பு அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. ஏற்பாடுகளை மேலநத்தம் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT