திருநெல்வேலி

பொதுக்குடி மாணவா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிப்பு

12th May 2022 03:21 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பள்ளக்கால் பொதுக்குடியில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சத்தை ஆட்சியா் வே.விஷ்ணு வழங்கினாா்.

பள்ளக்கால் பொதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவா் செல்வ சூா்யா, அப்பள்ளி மாணவா்கள் இடையிலான மோதலின்போது காயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

அந்த மாணவரின் குடும்பச் சூழ்நிலை கருதி முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சத்திற்கான காசோலையை மாணவரின் பெற்றோா் மு.முருகன்- உச்சினிமாகாளியிடம் ஆட்சியா் வே.விஷ்ணு வழங்கினாா். அப்போது, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT