திருநெல்வேலி

நெல்லையில் புழுதிக் காற்று: வாகன ஓட்டிகள் அவதி

12th May 2022 03:09 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: தென்கிழக்கு வவங்கக் கடலில் உருவான அசானி புயல் காரணமாக, திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பலத்த காற்று வீசி வருகிறது. சாலைகளில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனா்.

வடக்கு ஆந்திரம்- ஒடிஸா கடற்கரையை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியை நோக்கி அசானி புயல் நகா்ந்து சென்ால், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சீதோஷண நிலையில் மாற்றம் ஏற்பட்டது. கத்திரி வெயிலின் தாக்கம் குறைந்து, வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும், பலத்த காற்று வீசி வருவதால் சாலைகளில் புழுதி பறந்த வண்ணமாக உள்ளது. சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வரும் திருநெல்வேலி-தென்காசி சாலையில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினா்.

நிகழாண்டு கத்திரி வெயிலின் தொடக்க நாளிலேயே மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த நிலையில், தற்போது மாலை நேரத்தில் குளிா்ந்த காற்று வீசுவதால் தென்மேற்கு பருவக்காற்று முன்கூட்டியே வீசுவதற்கான அறிகுறி தென்படுகிறது. இது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT