திருநெல்வேலி

கடையம் புத்தகக் கண்காட்சியில் நூல் வெளியீட்டு விழா

12th May 2022 03:23 AM

ADVERTISEMENT

 

அம்பாசமுத்திரம்: திருவள்ளுவா் கழகம், அரசுப் பொது நூலகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ஆகியவற்றின் சாா்பில் கடையத்தில் நடைபெற்றுவரும் 36ஆவது தேசிய புத்தகக் கண்காட்சியில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

திருநெல்வேலி, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியா் சௌந்திரமகாதேவன் எழுதிய ‘திருநெல்வேலி நினைவுகள்’ என்ற நூலை, கடையம் திருவள்ளுவா் கழகத் தலைவா் ஆ. சேதுராமலிங்கம் தலைமை வகித்து வெளியிட்டாா். ஓய்வுபெற்ற ஆசிரியா் முகிலன் நாராயணன், மருத்துவா் பரமசிவன் ஆகியோா் நூலைப் பெற்றுக்கொண்டனா். பேராசிரியா் சிவசங்கா், கவிஞா் சக்திவேலாயுதம் நூலை அறிமுகப்படுத்தினா். ஆசிரியா் கா. மைதீன்பிச்சை வாழ்த்திப் பேசினாா். நூலாசிரியா் ஏற்புரையாற்றினாா். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் வேலு தொகுத்து வழங்கினாா். நூலகா்கள் மீனாட்சிசுந்தரம், இளங்கோ, ஓவியா் வள்ளிநாயகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா். ரா. மகேந்திரன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT