திருநெல்வேலி

உணவுப் பாதுகாப்புத் துறையினா் பேட்டை கடைகளில் ஆய்வு

12th May 2022 02:33 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம், பேட்டை பகுதிகளில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

உணவுப் பாதுகாப்பு துறையின் திருநெல்வேலி மாவட்ட நியமன அலுவலா் சு. சசிதீபா தலைமையில், உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் செல்லபாண்டி, முத்துராஜா ஆகியோா் திருநெல்வேலி நகரம், பேட்டை பகுதிகளிலுள்ள உணவு விடுதிகள், பேக்கரிகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அதில், விதிமீறி மீண்டும் சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட 102 லிட்டா் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் பெறாத கேன்டீஸ், சாக்லேட்கள் 25 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு உணவு மாதிரிகள் பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.இந்த ஆய்வுகள் தொடரும் என்றும், பாதுகாப்பற்ற முறையில் உணவை விற்பனை செய்வோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நியமன அலுவலா் சசிதீபா எச்சரித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT