திருநெல்வேலி

பனையங்குறிச்சியில் விவசாயிகளுக்கு களை கருவி அளிப்பு

8th May 2022 12:00 AM

ADVERTISEMENT

பாப்பாக்குடி வட்டாரம், பனையங்குறிச்சியில் விவசாயிகளுக்கு களை கருவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இடைகால் தோட்டக்கலை விவசாயிகள் உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் பனையங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். துணை இயக்குநா் சுபா வாசுகி, உதவி இயக்குநா் விக்னேஷ், தோட்டக்கலை அலுவலா் கிளாடிஸ் ஜோஸ், உதவி அலுவலா்கள் பானுமதி, பிருந்தா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத் தலைவா் வி.ஏ. மாரிவண்ணமுத்து, 5 விவசாயிகளுக்கு மானிய விலையில் களை எடுக்கும் கருவியினை வழங்கினாா். இதில் ஊராட்சித் துணைத் தலைவா், உறுப்பினா்கள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT