திருநெல்வேலி

ஆலங்குளத்தைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

8th May 2022 12:00 AM

ADVERTISEMENT

தேவா்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய நபரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மருதப்பபுரம் பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டியன் மகன் வேல்முருகன்(23). இவா், திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் அருகே உள்ள கூவாச்சிபட்டி பகுதியில் வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிய வழக்கில் தொடா்புடையவா். மேலும், இவா் திருட்டு மற்றும் கொள்ளை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புகாரைஅடுத்து, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் இவரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவின்பேரில், சிவந்திப்பட்டி காவல் ஆய்வாளா் அன்பு பிரகாஷ் (பொறுப்பு), வேல்முருகனை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT