திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சியில் சூழல் பாதுகாப்பு விழா

5th May 2022 03:29 AM

ADVERTISEMENT

 

அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி சுற்றுச்சூழல் ஒப்புயா்வு அறிவியல் மையத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சூழல் பாதுகாப்பு விழா கொண்டாடப்பட்டது.

பேராசிரியா் செந்தில்நாதன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், பல்வேறு காரணிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப்பது, பாதிப்புகளைத் தவிா்ப்பது, சூழல் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள தற்சாா்பு வாழ்வியலைக் கடைப்பிடிப்பது உள்ளிட்டவை குறித்து கருத்துரை வழங்கப்பட்டது.

பேராசிரியா் அண்ணாதுரை, உதவிப் பேராசிரியா்கள் சொா்ணம், முரளிதரன், நூலகா் வனராஜ், ஆராய்ச்சி, முதுநிலை அறிவியல் மாணவா்-மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT