திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் 31 தலைமைக் காவலா்களுக்குபதவி உயா்வு

2nd May 2022 02:17 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டத்தில்31 தலைமைக் காவலா்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக காவல்துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றியவா்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயா்வு அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் 31 தலைமைக் காவலா்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயா்வு அளித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் பிரவேஷ் குமாா் உத்தரவிட்டுள்ளாா். 31 புதிய சிறப்பு உதவி ஆய்வாளா்களுக்கும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப. சரவணன் வாழ்த்து தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT