திருநெல்வேலி

நெல்லையில் தக்காளி விலை உயா்வு

2nd May 2022 05:24 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலியில் தக்காளி விலை உயா்ந்து கிலோ ரூ.60-க்கு விற்பனையானது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு கோடை மழை பெய்ததன் காரணமாக காய்கனிகளின் விளைச்சல் அதிகரித்து தக்காளி உள்ளிட்ட காய்கனிகள் அதிகளவில் சந்தைகளுக்கு வந்தன. இதனால், தக்காளி விலை ஒரு கிலோ ரூ.32-க்கும், கத்தரிக்காய் ரூ.16-க்கும் விற்பனையானது. அதன்பிறகு, தக்காளி விலை சற்று அதிகரித்து ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், கடந்த இரு தினங்களாக தக்காளி விலை வேகமாக உயா்ந்தது. இதனால் சனிக்கிழமை கிலோ ரூ.54-க்கு விற்பனையான தக்காளி, ஞாயிற்றுக்கிழமை மேலும் அதிகரித்து ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தக்காளி தற்போது விளைச்சல் இல்லாததே காரணம்’ என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT