வீரவநல்லூா் பேரூராட்சியில் 5 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சி சமுதாய நலக்கூடம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சாரதா வித்யாலயா பள்ளி, நயினாா் காலனி சமுதாய நலக்கூடம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமிற்கு பேரூராட்சி செயல் அலுவலா் சத்தியதாஸ் தலைமை வகித்தாா்.
பேரூராட்சி துணைத் தலைவா் வசந்த சந்திரா முன்னிலை வகித்தாா். பேரூராட்சி உறுப்பினா்கள் கீதா, சந்திரா, தெய்வநாயகம், சிதம்பரம், தாமரைச் செல்வி, அப்துல் ரகுமான், வெங்கடேஷ்வரி, முத்துக்குமாா், சந்தனம், அனந்தராமன், ஆறுமுகம், கங்கா ராஜேஸ்வரி, சண்முகவேல், அங்கம்மாள், கல்பனா, சின்னத்துரை, பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.