திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருள்மிகு முருகன் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி கொடிமரத்துக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பின்னா் கொடியேற்றப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில், தினமும் காலையில் கும்ப பூஜை, சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெறும். இரவில் சுவாமி, கலைமான், கிடாய், பூதம், கிளி, வெள்ளிமயில், யானை, அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா நடைபெறும்.
9ஆம் திருநாளான மே 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெறுகிறது. பின்னா் சுவாமி அம்பாளுடன் திருத்தேரில் எழுந்தருளுகிறாா். அதைத் தொடா்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது. 10
ஆம் திருநாளான திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தீா்த்தவாரியும், மூலவருக்கு களப அபிஷேகமும் நடைபெறுகிறது. இரவு சுவாமி, அம்பாள் மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் தக்காா் ப.மாரியப்பன், செயல் அலுவலா் ம.ராதா மற்றும் பக்தா்கள் செய்துள்ளனா்.