மானூா் அருகே முதியவா் ஒருவா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
மானூா் அருகே செட்டிகுறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் முத்துவேல் (53). இவா் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென வீட்டில் தீக்குளித்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.