அம்பாசமுத்திரம் நகராட்சி சாா்பில் பிளாஸ்டிக், பாலிதீன் ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம் மற்றும் மீண்டும் மஞ்சள் பை திட்டம் தொடக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
அம்பாசமுத்திரம நகா்மன்றத் தலைவா் கே.கே.சி. பிரபாகரன் தலைமை வகித்து பிரசார வாகனத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். நகராட்சி ஆணையாளா் பாா்கவி முன்னிலை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் சிதம்பர ராமலிங்கம் வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் பாலிதீன் பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பை பயன்படுத்த வலியுறுத்தி பொதுமக்களுக்கு மஞ்சள் பை கொடுத்து, பிளாஸ்டிக் விழிப்புணா்வு துண்டறிக்கைகளை வழங்கினா்.
நிகழ்ச்சியில் நகா்மன்ற துணைத் தலைவா் சிவசுப்பிரமணியன், உறுப்பினா்கள் வேலுச்சாமி, ராமசாமி, ஜோதிகலா, லதா, அனுசியா, பேச்சி கனியம்மாள், முத்துலட்சுமி, சித்ராதேவி உள்பட பலா் கலந்து கொண்டனா்.