திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக தோ்வு செய்யப்பட்டுள்ள அதிமுக நிா்வாகிகள் எம்ஜிஆா் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அதிமுக அமைப்புத் தோ்தலில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள், திருநெல்வேலி மாவட்டச் செயலா் தச்சை என். கணேசராஜா தலைமையில் கொக்கிரகுளத்தில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இந்நிகழ்ச்சியில், மாநில அமைப்புச் செயலா் சுதா கே. பரமசிவன், எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் கல்லூா் இ.வேலாயுதம், முன்னாள் துணை மேயா் ஜெகநாதன் என்ற கணேசன், மாவட்ட அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், மாவட்ட இணைச் செயலா் தேவகி பாலசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளா் சௌந்தரராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.